சொல் பொருள்
இல்லை என்று சொல்லியும் இருக்கும் எனத் தேடுபவனைத் தெளியக் கடைந்தவன் என்பது நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்க்கு ‘தெளிவு’ என்பது பெயர். அதில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட பின்னரும் ஏதேனும் இருக்குமெனக் கடைந்து பார்த்தல் தெளியக் கடைதல் ஆகும். இல்லை என்று சொல்லியும் இருக்கும் எனத் தேடுபவனைத் தெளியக் கடைந்தவன் என்பது நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்