Skip to content

சொல் பொருள்

(வி) 1. தெளிவாக ஒலி, 2. ஒளிபெறு, 2. (பெ) தெளிவான ஓசை, 

சொல் பொருள் விளக்கம்

1. தெளிவாக ஒலி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound clearly, shine, sparkle, clear sound

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10

நுண்ணிய திரண்ட ஒளி பொருந்திய வளை ஒலிக்கும் முன்கை

ஒண்_தொடியார்
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை
கண்ணும் கழிய சிவந்தன – பரி 10/94-96

ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர்,
நீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின்
கண்களும் மிகவும் சிவந்தன;

தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2

தெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிவான ஓசையுள்ள மணிகள் ஒலிக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *