சொல் பொருள்
(பெ) தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை,
சொல் பொருள் விளக்கம்
தேம், தேன் ஆகியவற்றின் கடைக்குறை, இனிமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sweet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171 வேய் பெயல் விளையுள் தேன் கள் தேறல் மூங்கில் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவை தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6 தேம் கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் தேமாவின் கனியை உண்ணும் முள் போன்ற கூரிய எயிற்றினையும் செவ்விய வாயினையும் தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/3 சிறுதேர் உருட்டி விளையாடும் இனிய மொழிகளைப் பேசும் புதல்வன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்