சொல் பொருள்
(வி.எ) தேடிக்கொண்டே,
சொல் பொருள் விளக்கம்
தேடிக்கொண்டே,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
keep looking for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி பெயர் களரில் போகிய மட மான் விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட காமர் நெஞ்சமொடு அகலா தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/7-10 கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான் கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட, விருப்பங்கொண்ட நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல் பார்வையால் தேடிக்கொண்டே நிற்கும் ஆண்மானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்