சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. தொங்கவிடுதல், 2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, 3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை, 4.தொடுத்த மாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hanging, suspension
garland of flowers or leaves
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 636 தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்; சுனை பூ குற்றும் தொடலை தைஇயும் – நற் 173/1 சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும் அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலை தொடலை தைஇ – அகம் 105/1,2 அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின் ஒள்ளிய இலைகளிலாலான மாலையினை அணிந்து தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6 மேகலை அணிந்த அல்குலையும் தொடி அணிந்த தோளையுமுடைய பெண்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்