சொல் பொருள்
(பெ) 1. கட்டுதல், 2. செயலைத் தொடங்குதல், 3. யாழ் நரம்பு, 4. படிக்கட்டு, 5. கட்டுதல் உள்ள யாழின் இசை, 6. வில்லில் அம்பினைத் தொடுத்தல், 7. பல பொருட்களை ஒன்றாகக் கட்டுதல், கொத்து, 8. பூக்களின் கட்டுகை, பூமாலை, 9. நல்ல கட்டுதல் அமைந்த உடம்பு, 10. (முத்து)கோக்கப்பட்ட மாலை, 11. துடை,
சொல் பொருள் விளக்கம்
கட்டுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fastening, tying, starting of an action, string of ‘yazh’, step, stairs, the music from the yazh with tight strings, the music from the yazh with tight strings, bunch, cluster, flower garland, well-built body, string of pearls, thigh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடை அமை மாலை விறலியர் மலைய – பெரும் 486 கட்டுதல் நன்றாக அமைந்த மாலையை ஆடும் மகளிர் சூடி நிற்ப மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68 மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும் அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும் தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 68,69 குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை, பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி, குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142 (ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள் திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் – பட் 254 முறுக்குதல் புரிந்த நரம்பின் இனிதாகிய கட்டினையுடைய யாழின் இசையைக் கேட்டற்குக் காரணமான துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6 பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள் எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4 பகல்நேரத்து முயலைத் தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில் சுமந்துவந்த பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து, பகல்நேரத்து முயலைத் தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில் சுமந்துவந்த பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து, கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8 கூட்டமாய் மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்கு காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/8,9 காணாமலேபோகட்டும் – உன்னைப் புகழ்ந்த யாக்கையாகிய, மிக்க வலிமை பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக – பரி 6/16 திரண்ட ஒளியினையுடைய முத்து வடங்கள் சந்தனப்பூச்சால் கலங்கி ஒளிமங்கித் தெரிய, கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/4,5 வளைந்த தொடையினை உடைய கன்றுடன் மரத்தில் கட்டப்பெற்ற ஆசைமிக்க பசுவைப் போல, (அவள்) முதுகினைப் பார்த்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்