Skip to content

சொல் பொருள்

(வி.எ) தொடு என்பதன் பெயரெச்சம்

1. தொட்ட – தீண்டிய,

2.தொட்ட– தோண்டிய, 

3.தொட்ட – வெட்டிய, கத்தரித்த,

4.தொட்ட –  தரித்த, அணிந்த,

5. தொட்ட –  துளைத்த

6. தொட்ட – தொடுத்த, செலுத்திய ,

7. தொட்ட – ஆணையிட்ட

சொல் பொருள் விளக்கம்

தொடு என்பதன் பெயரெச்சம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

touched

dug, scooped out, scissored, put on as a ring or dress, pierced, discharged, swore

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10

இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்

கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1

ஆண்குரங்கு கையால் தோண்டிய கமழ்கின்ற சுளையைக் கொண்ட பெரிய பலாப்பழத்தை

எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1

கத்தரிக்கோலால் இடையிடையே வெட்டப்பட்ட கார்மேகத்தின் அழகினைப் பெற்ற கூந்தலைப் போல்

சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/20,21

விருப்பம்போல் திரிபவனே! அந்தப் பரத்தையரின் கையிலுள்ளதை, என்னை இகழும்படியாக நீ
அணிந்திருக்கும்
மோதிரங்கள் எவை? நான் பார்க்கிறேன்!

தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி
தங்கார் பொதுவர் – கலி 106/23,24

துளைபட்ட தம் புண்ணிலிருந்து ஒழுகுகின்ற குருதியைக் கையால் துடைத்து, உடம்பிலும்
தடவிக்கொண்டு,
சற்றும் தாமதிக்காமல் அந்த இடையர்,

நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/6,7

எள்ளி நகைக்கத்தக்கவன் நான் என்று என் உயிர்போகும்படி காமக்கணைகளைத் தொடுத்த
கொடுமையுடையவளே! உனக்கு என்ன பிழைசெய்தேன், பெண்ணே! நான்?”

பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி – நற் 378/10

அன்பு மிகும்படி ஆணையிட்டுக்கூறிய மெல்லிய சூளுரையை மெய்யென விரும்பிக்கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *