சொல் பொருள்
(பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,
சொல் பொருள் விளக்கம்
பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancient, belonging to times long past
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1 உயிருடன் கலந்துபொருந்திய பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகின்ற நட்பினால் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3 தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யாகியதோ? தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16 பழமையுற்றுக் கிழிந்து பிளவுபட்ட என் பீறிய உடையை முற்றவும் நீக்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்