சொல் பொருள்
(வி) 1. கெடு, அழி, 2. சோர்வடை, தளர்ந்துபோ, 3. உழு,
சொல் பொருள் விளக்கம்
கெடு, அழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perish, be ruined, be weary, fatigued, plough
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 434,435 கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு, (பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய; தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14 அழுந்தூர்க்கண் எழுந்த சோர்வடையாத ஆரவாரத்திலும் பெரிது. தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122 உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்