சொல் பொருள்
(வி) 1. அகழ், குழி பறி, 2. குடைந்தெடு, 3. பாரத்தை இறக்கு
சொல் பொருள் விளக்கம்
அகழ், குழி பறி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dig, excavate, scoop out, to unload, as a ship
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8 பசுக்களை நடத்திச்செல்பவர்கள் பறித்த குழிவான பள்ளத்தின் நீரை ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26 காளைகள், தம்முடைய அலங்கரிக்கப்பட்ட கொம்புகளால் குத்திக்குடைந்தெடுத்த கொத்தான குடல்களை மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது புகாஅர் புகுந்த பெரும் கலம் – புறம் 30/12,13 மேலே இருக்கும் பாயை மடக்காமல், மேல் பாரத்தையும் இறக்காமல் ஆற்றுமுகத்தில் புகுந்த பெரிய மரக்கலத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்