சொல் பொருள்
1. (வி.எ) தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம், 2. செங்காந்தள், 3. ஒரு மலை,
சொல் பொருள் விளக்கம்
தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appear, malabar glory lily, a mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய_காலை பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/5-7 தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு அரியவளாய் இருந்த பொழுதில் பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான் குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1 குவிந்த கொத்தான செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/3 வானளாவ உயர்ந்த உச்சியையுடைய தோன்றிமலைக்குத் தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்