சொல் பொருள்
கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர்
சொல் பொருள் விளக்கம்
கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர். அத்தன் அப்பன் அச்சன் அனைத்தும் தலைவன், மணவாளன் என்னும் பொருளன. தோழன் + அத்தன் = தோழத்தன் என்பது அத்தனுக்குத் தோழன் என வழங்குகின்றது. அத்தன் தோழன் என்பது முன்பின் மாற்றமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்