சொல் பொருள்
1. (வி) 1. ஈரமாகு, 2. அரும்பு, 3. தோன்று, தோற்று,
2. (பெ) 1. பூ அரும்பு, 2. கள்,
சொல் பொருள் விளக்கம்
ஈரமாகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become wet, be moistened, bud, appear, manifest, flower-bud, toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் – ஐங் 206/3 மழைத் தூறலில் ஈரமாகிப்போன மாலை போன்ற ஒளிவிடும் வாளையும் நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/9 அரும்பிய செருந்தியின் போதுகள் இதழ்விரிய மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67 மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164 பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும் சாறு படு திருவின் நனை மகிழானே – பதி 65/17 திருவிழாக் காலத்து செல்வத்தைப் போன்ற கள்ளுண்ணும் இன்ப இருக்கையின்போது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்