சொல் பொருள்
நாறிப்போதல் – அருவறுப்பான குணம், இழிமை
சொல் பொருள் விளக்கம்
நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்கமுடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும் வெறுக்கத்தக்க மணமும் நாறுதலே. ‘பீநாறி’ என்பதொரு செடிப் பெயர். அதன் தன்மையை இனி விளக்க வேண்டியதில்லையே. இந்நாறுதல் மூக்கை நாறச் செய்யாமல் மனத்தில் நாறுதலை உண்டாக்கும் இழிசெயல் செய்வதைக் குறிப்பதாக வழங்குகின்றது. அவன் பிழைப்பு நாறிப் போயிற்று. அவன் நாறின பயல்; பீநாறிப்பயல் என்பனவெல்லாம் நாறிப்போதல் பொருளை நவில்வன.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்