சொல் பொருள்
1. (வி) தொங்கவிடு,
2. (பெ) பிடுங்கி நடக்கூடிய இளம்பயிர்,
சொல் பொருள் விளக்கம்
தொங்கவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hang, suspend
Seedlings reared for transplantation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனை மணல் அடுத்து மாலை நாற்றி உவந்து இனிது அயரும் என்ப – அகம் 195/4,5 மனையின் முற்றத்தே மணலைப் பெய்து மாலைகளைத் தொங்கவிட்டு மகிழ்ந்து இனிதே மனையின் கண் கோலம் செய்யும் என்ப செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2 பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்