சொல் பொருள்
(வி) ஒத்திரு, (பெ) ஒளி,
சொல் பொருள் விளக்கம்
ஒத்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
resemble, brightness, splendour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவள் அம்ம நீ இனி கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரி பெரு நலம் தருக்கும் என்ப – ஐங் 67/1-3 அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்; தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள் தாது சேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/6,7 பூந்தாதுக்கள் சேர்ந்த ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்த்தார்களே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்