Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. விலகு, நீங்கு, அகலு, 2. நீங்கு, 3. கைவிடு, துற

2. (பெ) முன்னிலை ஒருமைப்பெயர்,

சொல் பொருள் விளக்கம்

விலகு, நீங்கு, அகலு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

part from, be removed, give up, renounce, second person singular pronoun, you

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/8,9

கீழும் மேலும் நடத்திச் செல்வோர் விட்டகன்ற
வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போல

நன் நுதல் நீத்த திலகத்தள் – கலி 143/3

நல்ல நெற்றியினின்றும் திலகம் நீங்கியவள்

ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7

பெற்ற தாய்கைவிட்ட குழவியைப் போல

நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15

நீரை விட்டு நீங்கிய மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *