சொல் பொருள்
(பெ) 1. புழுதி, 2. சாம்பல், 3. துகள், பொடி,
சொல் பொருள் விளக்கம்
புழுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dust, ashes, powder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201 புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும் மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8 மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10 அந்த யானைதான் சுண்ணப்பொடி பூசி நறுமணமிக்க மதுநீர் உண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்