சொல் பொருள்
1. (வி) 1. மடக்கு, 2. கவிழ்த்து, 2. (பெ) மடிப்பு,
சொல் பொருள் விளக்கம்
மடக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fold, turn upside down, fold
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20 உணவுண்ட நல்ல இலைகளில் உண்ணமாட்டாது ஒழித்த மிக்கவற்றை இலையிடையே வைத்து மடக்கவும் கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 339,340 கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/50,51 பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது உன் சக்கரப்படையின் உடல்; பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் (மடிப்பான)கொழுந்துதான் அதன் நிறம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்