நுவணை என்பது மாவு
1. சொல் பொருள்
(பெ) இடித்த மாவு, தினை மாவு.
2. சொல் பொருள் விளக்கம்
நுண்ணித்தாக இடித்த மாவு நுவணை எனப்படும். கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இடித்து மாவாக்கித்தான் உண்ணப் பயன்படுத்தமுடியும். நுவணை என்பது பெரும்பாலும் தினையரிசி மாவிலிருந்து செய்யப்படுவது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
flour
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குறமகள்
மென் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/1-3
குறமகள்
மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி,
ஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!
விசையம் என்பது சர்க்கரை. பூழி என்பது தூள். சர்க்கரையை சுளகில் இட்டுத் தெள்ளினால்,
ஓர் ஓரத்தில் மாவுமட்டும் தனியாக ஒதுங்கும். அவ்வாறு ஒதுங்கிய சர்க்கரை மாவைப் போல இருக்குமாம் தினை மாவு.
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை/நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 445,446
(திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் (பெறுவீர்); 445
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் – பதி 30/24
மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறை முறையாய்ப் பகிர்ந்தளிக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்