சொல் பொருள்
மனம், இருதயம், ஆகமம்
சொல் பொருள் விளக்கம்
மனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mind, heart, Agamas
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் புல பெயல் நீர் போல அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/4,5 செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் மனங்கள் தாமாக ஒன்றுபட்டனவே ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43 எருமைக்கடாவில் வருகின்ற கூற்றுவனின் இருதயத்தைக் கால்நுனியால் பிளந்திட்டு சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்து உடன் போற்றி – பதி 21/1,2 சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய ஐந்தினையும் சேர்ந்து கற்று,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்