சொல் பொருள்
நெடுநேரம், நெடுந்தொலைவு, நெடுங்காலம், பெரியன, நீண்டன, பெருமொழி, வீராப்பு, நீண்ட, நீண்ட தூரத்தன, நீண்டு செல்வன
சொல் பொருள் விளக்கம்
நெடுநேரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
long time, long distance, long period, big, lengthy, boasting, long, are very distant, are very long
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7 நிழல் கண்ட இடமெல்லாம் நெடுநேரம் தங்கி அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து பெரும் கல் அதர் இடை பிரிந்த_காலை தவ நனி நெடிய ஆயின – ஐங் 359/1-3 கிட்டுவதற்கரிய பொருள்மீது பற்றுடையவனாகி, உன்னைத் துறந்து பெரிய பாறைகளின் வழியே செல்லும் பாதையினிடையே பிரிந்து சென்றபோது மிக மிக நெடுந்தொலைவாக இருந்தது நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4 மிகவும் நீண்ட காலம் தங்கிவிட்டோம், அழகிய அணிகலன்களை அணிந்தவளை மறந்து குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520 சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154 சிற்சில சொற்களாலும், நீண்ட மொழிகளாலும் (ஆறுதல்)உரைகள் பலவற்றையும் திரும்பத்திரும்பக் கூறி, நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்_வினை பயனே – நற் 210/5,6 பெருமொழி பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும் செல்வம் இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்; நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த – குறு 252/1 நீண்ட திரண்ட தோள்களில் உள்ள வளைகளை நெகிழும்படி செய்த கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – அகம் 89/17 கொல்லையினையுடைய பெரிய காடுகளை நீண்ட தூரத்தன என்று எண்ணாது நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2 நீண்டு செல்வன என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்