சொல் பொருள்
திருமால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் மன்னன், சிவபெருமான், முருகன், உயர்ந்தோன், இந்திரன்
சொல் பொருள் விளக்கம்
திருமால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Vishnu, a Pandiya king, Lord Siva, Lord Muruga, great person, Lord Indra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402 நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தி பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 61 பொன்னால் செய்த மாலையை அணிந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழால் நீண்டவனுடைய வழியில் வந்தவனே மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455 மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/16 இடையறாத விழாக்களையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே – புறம் 114/6 தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை. வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3 வச்சிராயுதத்தையுடைய விசாலமாகிய கையையுடைய இந்திரனது கோயிலினுள்ளே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்