சொல் பொருள்
நெட்டியைப் பிடித்தல் – ஏவுதல், கடினமான வேலை
சொல் பொருள் விளக்கம்
நெட்டியாவது பிடர். குப்புற வீழ்த்த நினைவார், பிடரைப் பிடித்துத் தள்ளுவர். அவ்வழக்கம் பிடர் பிடித்துத் தள்ளாமலே, ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்கு வந்தது. வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்ய ஏவுதலே நெட்டியைப் பிடித்தலாகச் சொல்லப்படும். இனித் தாங்க இயலாச் சுமையைத் தலையில் வைத்துச் சுமப்பவர் தம் கழுத்தைப் பிடித்து விடுவது வழக்கு. அதுபோல் கடினமான வேலையில் ஈடுபட்டிருப்பவர் நெட்டியைப் பிடிக்கிறது என்றும், நெட்டியைப் பிதுக்குகிறது என்றும் கூறுவது உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்