சொல் பொருள்
நெடிய உருட்டு, தாளவகை
சொல் பொருள் விளக்கம்
நெடிய உருட்டு, தாளவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of time-measure in music
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து போர் ததும்பும் அரவம் போல் கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/42-45 சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும் தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து, போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன; – நெட்டுருட்டு – நெடிய உருட்டு – தாளவகை – பெ.சுப்பிரமணியன் உரை (NCBH), ச.வே.சு உரை – நெட்டுருட்டுச் சீர் என்றது மலைப்பகுதிகளில் வருகின்ற தேர் உருள்கள் எழுப்புகின்ற ஒலியினை – புலியூர்க்கேசிகன் உரை விளக்கம் – நெட்டுருட்டு – long musical notes (with drums, with lutes) – Vaidehi Herbert translation
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்