சொல் பொருள்
நெருக்குதல் – மலநீர் கழித்தல்
சொல் பொருள் விளக்கம்
நெருக்கம் என்பது செறிவுப் பொருளது. பயிர் நெருக்கம், களை நெருக்கம் என்பவை அதனைக் காட்டும். “எனக்கு நெருக்கமானவர்” என்பது உறவினர் நண்பர் என்பதைக் காட்டும் செறிவுப்பொருளேதரும். அடிக்கடி துன்புறுத்தலும் நெருக்கல் என்றும் நெருக்கடி என்றும் சொல்லப்படும். அவன் செய்யும் நெருக்குதலுக்கு அளவேயில்லை என்பது அதனைக் காட்டும். ஒன்றுக்கு இரண்டுக்கு என்பவை நெருக்குதலாகச் சொல்லப்படுதல் உண்டு. உடனே செய்யவேண்டிய நெருக்கடிகள் தாமே அவை. இயற்கையின் அறைகூவல் அல்லவா அவை?
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்