சொல் பொருள்
நெல் – நெல் தவசம்
புல் – புல் தவசம்(கம்பு)
சொல் பொருள் விளக்கம்
நெல்-நன்செய்ப்பயிர்,
புல்- புன்செய்ப் பயிர்.
முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது. பின்னது கரிசல் மண்ணில் இயல்பாகப் பெய்யும் மழையில் எளிதாய் முளைத்து நல்வளம் தருவது. புல்லரிசி என்பதொன்றுண்டு. அது நெல்லொடு கூடியதன்று. அஃது எறும்பு சேர்த்து வைக்கும் புல். மலைநெல், வெதிர்நெல் என்னும் மூங்கில் நெல். ஐவனம் என்பது இலக்கியச் சொல்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்