சொல் பொருள்
நெளிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக வளைந்து கொடுத்து நிறைவேற்றல்.
சுழிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக சூழ்ச்சி வழியில் நிறைவேற்றல்.
நெளிவு – ஒரு பொருள் நெளிந்துவிடுதல் அல்லது வளைந்து விடுதல்.
சுழிவு – நெளிந்த பொருள் மேலும் நெளிதல்.
சொல் பொருள் விளக்கம்
சி“அவன் நெளிவு சுழிவானவன்;” “அவன் நெளிவு சுழிவாக நிறைவேற்றிக் கொள்வான்” என்பவற்றில் இவ்விணை மொழி விளக்கம் தெளிவாம். ‘நெளிவு சுழிவு’ காண்க.
நெளிவினும் சுழிவு சீர்கேடு மிக்கதாம். நெளிவெடுக்க ‘ஈயம் பூசுவார்’ கருவியுடன் வருவர். அது சழிவு ஆகுமானால் எவ்வளவு தட்டிக் கொட்டிப் பார்த்தாலும் சழிவு அடையாளம் இருக்கவே செய்யும்.
நெளிவு, எவராவது திமிராகப் பேசினால், “உன் நெளிசலை எடுக்க வேண்டுமா?” என்னும் அளவுக்கு விரிந்தது.
‘நெளிவு சுழிவு’க்கும் நெளிவு உதவியுள்ளது. ‘நெளிவு என்பது விரலணிகளுள் ஒன்றுமாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்