சொல் பொருள்
ஆழ்ந்த தியானம், சமாதி
சொல் பொருள் விளக்கம்
ஆழ்ந்த தியானம், சமாதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
intense contemplation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து வசித்ததை கண்டம் ஆக மாதவர் மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின் சாலார் தானே தரிக்க என அவர் அவி உடன் பெய்தோரே அழல் வேட்டு – பரி 5/36-41 இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை, ஆழ்ந்த தியானத்தினால் ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து, பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின் மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால் அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள் வேள்வியுணவாக, ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்