சொல் பொருள்
விலை, விற்பனை, பண்டமாற்றுப்பொருள்
சொல் பொருள் விளக்கம்
பண்டமாற்றுப்பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
price, sale, item of exchange
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141 விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி நறவு நொடை கொடியொடு பிறபிறவும் நனி விரைஇ – பட் 180,181 கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன், 180 ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால் உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6 உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்