நொய்யல் என்பது சிறிதடைந்த ஆறு
1. சொல் பொருள்
சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர்
2. சொல் பொருள் விளக்கம்
பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின் பயன் என்ன? அணைகள், கால்கள் அமைகின்றன. வேளாண்மைப் பயன் குடிநீர்ப் பயன் ஆகியவை ஆகி அளவால் சுருங்கிச் சிறுகி ஓடுகின்றது. அரிசியில் குறுநொய்யும், நொய்யும் உள்ளமை போலச் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர். கோவையார் கொண்டதும் கண்டதுமாம் ஆறு நொய்யலாறு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்