பகுமானம் என்பதன் பொருள்தனிப்பெருமை, தற்பெருமை.
1. சொல் பொருள்
பகுமானம் – தனிப்பெருமை, தற்பெருமை
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
unreasonable and inordinate self-esteem
3. சொல் பொருள் விளக்கம்
மானம் என்பது பெருமை, பகு என்பது பகுக்கப்பட்டது அல்லது பிரிக்கப்பட்டது. பெரிது என்பதுமாம். பிறரினும் தன்னைப் பெரிதாக எண்ணிக்கொள்வது பகுமானமாகும் “உனக்கிருக்கும் பகுமானத்தில் எங்களை நினைக்க முடியுமா?” உன் பகுமானம் உன்னோடு; எங்களுக்கென்ன ஆகப்போகிறது” உன் பகுமானத்தை வேறுயாரிடமும் வைத்துக்கொள்” என்பனவெல்லாம் பகுமானச் செய்திகள், பகுமானம் என்பது தற்பெருமை, செருக்கு ஆணவம் என்றெல்லாம் சொல்லப்படுவதற்குப் பொதுமக்கள் சொல்லும் வழக்குச் சொல்லாம்.
இது ஒரு வழக்குச் சொல்
4. பயன்பாடு
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்