சொல் பொருள்
(வி.எ) 1. படிந்து, கவிந்து, 2. படிய, குளிக்க,
சொல் பொருள் விளக்கம்
1. படிந்து, கவிந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
covering with, to bath
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் தண் மழை தலைய ஆகுக நம் நீத்து சுடர் வாய் நெடு வேல் காளையொடு மட மா அரிவை போகிய சுரனே – குறு 378 சூரியனையே காணாத மாண்புள்ள நிழல் படிந்து மலையில் தொடங்கும் சிறிய வழியும், மணல் மிகப் பரவியதாய் குளிர்ந்த மழை பெய்வதாகவும் ஆகுக; நம்மைப் பிரிந்து ஒளிவிடும் இலையைக் கொண்ட நெடிய வேலையுடைய தலைவனோடு மடப்பம் உள்ள மாமைநிறமுள்ள நம் பெண் போகின்ற பாலை நிலத்தில் மடப்பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4,5 இளைய பெண்யானை தன் துதிக்கை மறையத்தக்க வெள்ளத்தில் தன் ஆண்யானையுடன் குளித்து விளையாட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்