படைக்கால் என்பது நீரோடும் படை வாய்க்கால்
1. சொல் பொருள்
(பெ) 1. நீரோடும் படை வாய்க்கால், 2. கொழுவைப் பொறுத்தும் ஏர் நுனி
2. சொல் பொருள் விளக்கம்
உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால் அடிப்பது (ஆழமாக உழுவது) உண்டு. அது படைச் சால் எனப்படும். அப் படைச் சால் ஒன்றன் இருபக்கங்களிலும் வரப்பு அமைத்து நீரோடும் வாய்க்கால் ஆக்குவது வழக்கம். அவ் வாய்க்கால் சாலுக்கு இருப்பக்கமும் உள்ள சால்களை வரப்புகள் ஆக்கிப் பாத்திகட்டி நீர்விடுவர். அந் நீரோடும் படை வாய்க்காலை படைக்கால் என்பது திருமங்கல வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்