பணிலம் என்பதன் பொருள்சங்கு, வலம்புரிச்சங்கு
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) சங்கு, வலம்புரிச்சங்கு, சங்கினால் இயன்ற கைவளை வகை, இசைக்கருவி
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
conch, Ancient music instrument
3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/1-3 முரசு முழங்க, சங்கு ஒலிக்க, அமர்ந்து மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும் நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து - மது 380 பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து நொடை நவில் நெடும் கடை அடைத்து – மது 621,622 சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலைத் தாழ்த்திப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து, ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென - அகம் 350/12 முறை எழுந்தன பணிலம் வெண்குடை - சிலப்.புகார் 1/47 தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால் வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 3.76.3 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் 8.திருவா.151 மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில் 8.கோவை.63 தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார் வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் 12.0063 தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 12.2044 முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார் செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் 12.2140 மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 12.2154 நற்பெரும் பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட 12.2999
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்