சொல் பொருள்
பந்தாடுதல் – அடித்து நொறுக்குதல்
சொல் பொருள் விளக்கம்
உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லாமலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப்பந்தாடுதல் அடித்து நொறுக்குதல் பொருளதாம். “சும்மா இருக்கிறேன் என்று நினைக்காதே; எழுந்தேன் உன்னைப் பந்தாடி விடுவேன்” என்று வீராப்புப் பேசுவோரும், பேசியபடி செய்வாரும் உளர். அப் பந்தாட்டக்காரர், அவரையும் பந்தாட வல்லாரைக் கண்டு சுருக்கி மடக்கிக் கொண்டு போய்விடுவதும் கண்கூடு. ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குத் தொக்கு என்பது பழமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்