Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பசலை, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம், இளமை,

சொல் பொருள் விளக்கம்

1. பசலை, காதலர் பிரிவால் பெண்களின் மேனியில் ஏற்படும் நிறமாற்றம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction; youth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ
துவலை தண் துளி வீசி
பயலை செய்தன பனி படு துறையே – ஐங் 141

மணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
மழைத்தூவலாகக் குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி,
என்னைப் பசக்கும்படி செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள்.

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2

வருத்தத்தால் ஊர்ந்து செல்வதுபோன்ற நடையினையும் இளமையினையும் உடைய பார்ப்பான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *