சொல் பொருள்
(பெ) பரு + அரை பராரை ஆனது, பருத்த அடிப்பகுதி,
சொல் பொருள் விளக்கம்
பரு + அரை பராரை ஆனது, பருத்த அடிப்பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
large trunk
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4 பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும், துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104 அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்) பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்