சொல் பொருள்
1. (வி.மு) வருந்தவேண்டாம், 2. (பெ) விரைவான ஓட்டம், 3. (பெ) வருந்துதல்,
சொல் பொருள் விளக்கம்
வருந்தவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
don’t get distressed, getting distressed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி பரியல் வாழி தோழி – ஐங் 392/1-3 மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால் அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து வருந்தவேண்டாம், வாழ்க, தோழி! பரியல் நாயொடு பன் மலை படரும் வேட்டுவன் பெறலொடு அமைந்தனை – அகம் 28/7,8 விரைவான ஓட்டத்தையுடைய வேட்டை நாயுடன் பல மலைகளையும் கடந்து செல்லும் வேட்டைக்காரனைப் பெறுவது ஒன்றே போதுமென்று இருக்கிறாய் என்னதூஉம் பரியல் வேண்டா – புறம் 172/4,5 சிறிதளவும் இரங்குதல் வேண்டா.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்