பொருள்
- பருந்து
விளக்கம்
பருந்து என்பது ‘பருஞ்சு’ எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது புரிஞ்சு எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் ‘பரு’ மாறிற்றில்லை.
“பருஞ்சு இறை” என்பது அது (ஆரணிய. 955).
பருந்துகளின் தலைவனாம் சடாயு எனப்பொருள் காணின் இப்பிரிப்பாம். ‘பருஞ்சிறை’ பரிய சிறகுகளையுடைய சடாயு எனின் வேறு பிரிப்பாம். இரு வகையாகவும் கொள்வார் உளர். (வை.மு.கோ; கம்பராமாயண அகராதி).
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: “பருஞ்சு இறை” என்பது அது (ஆரணிய. 955).