பலாசம் என்பதன் பொருள்புரசமரம்.
1. சொல் பொருள்
(பெ) புரசமரம், பூ
2. சொல் பொருள் விளக்கம்
பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( butea frondosa ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Palas-tree, Butea frondosa; butea monosperma
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 88 துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப - சிந்தா:3 834/2 புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் - தேவா-அப்:274/1 பாங்கு படவே பலாச பலகையில் - திருமந்:999/2 பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை - திருப்:620/7 புண்ணிய பலாசின் கண் நிறை சமிதை - இலாவாண:3/14 பாற்படு பலாசின் நோக்கமை கொழு நிழல் - நரவாண:2/16 தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும் - உஞ்ஞை:52/42 பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும் - இலாவாண:12/27 பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் - சுந்:2 68/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்