சொல் பொருள்
(பெ) யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,
சொல் பொருள் விளக்கம்
யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ancient class of Tamil bards and minstrels;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/7,8 புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4 பாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள். பாணர் முல்லை பாட சுடர் இழை வாள் நுதல் அரிவை முல்லை மலைய இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/1-3 பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க, இனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்