பாதிரி என்பது பொன் நிறப்பூ மரவகை
1. சொல் பொருள்
(பெ) 1. அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி மரவகை, 2. வெள்ளைப்பூ, சிவப்புப்பூ, பொன் நிறப்பூ மரவகை; 3. கிருத்துவ போதகர்(Rev. Father)
2. சொல் பொருள் விளக்கம்
அம்பு, அம்புவாகினி, பாடலம், புன்காலி எனவும் அழைப்பர்
- வழக்கமாக, பங்குனி, சித்திரை மாதத்தில் பூக்கள் பூக்கும்
- இம்மரத்தில், பூக்கள் காய்ந்து உதிர்ந்து விடும்; காய் பிடிக்காது.
- பண்ணன் வாழ்ந்த சிறுகுடியில் இம்மரங்கள் மிகுதி
- இம்மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும்
- ஆற்றுத் துறையில் வேனில் காலத்தில் பாதிரி மலரும்
- பருத்த அடிமரம் கொண்டது.
- மலர் பழுக்கக் காய்ச்சிய தகடு போல் எரிநிறம் கொண்டிருக்கும்
- ஓவியர்களின் செந்நிறம் தோய்த்த தூரிகை போலப் பாதிரியின் தூய மலர் இருக்கும்
- காம்பு சிறிதாக வளைந்திருக்கும்
- அடிப்பூ கருத்திருக்கும்
மொழிபெயர்ப்புகள்
yellow snake tree • Bengali: পারুল parul • Gujarati: પાડેલી padeli • Hindi: पारल paral, पारोली paroli • Kannada: ಕಲಾದ್ರಿ kalaadri, ಪಾದರಿ paadari • Konkani: पाडल paadal • Malayalam: കരിങ്ങഴ karingazha, പാതിരി paathiri, പൂപ്പാതിരി puuppaathiri • Marathi: पाडळ padal, पाडळी padali • Mizoram: zinghal • Oriya: pamphunia • Sanskrit: पाटला patala, पाटलि patali • Tamil: அம்பு ampu, அம்புவாகினி ampuvakini, பாடலம் patalam, பாதிரி patiri, புன்காலி punkali • Telugu: అంబువాసిని ambuvasini, కలిగొట్టు kaligottu, పాదిరి padiri, పాటల patala • Urdu: پارل paral
3. ஆங்கிலம்
Purple-flowered fragrant trumpet-flower tree, Stereospermum suaveolens, Bignonia suaveolens;
White-flowred trumpet-flower tree, Stereospermum xylocarpum
Yellow-flowered fragrant trumpet-flower tree, Stereospermum chelonoides;
christian missionary, clergyman
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6
பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய பாதிரியின்
வளமையான இதழையுடைய பெரிய பூவின் வயிற்றை நடுவே பிளந்ததனுடைய
உள்ளிடத்தைப் போன்ற நிறமூட்டப்பெற்ற தோலினையும்;
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி – நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில்
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/1,2
கரிய கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே பாதிரியின்
தூய பொன் தகடு போன்ற மலரையும் சேர எதிரெதிர் வைத்துத்தொடுத்துக்கட்டிய மலர்மாலையைச் சூடிய கூந்தலின்
அ. இந்தப் பாதிரி மலர் மிகுந்த மணமுடையது.
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74
கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ
ஆ. பாதிரி மரம் பருத்த அடிமரத்தைக்கொண்டது.
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
இ. பாதிரிப்பூ இளவேனில் காலத்தில் பூக்கும்.
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
ஈ. இதன் காம்பு சிறியதாக இருக்கும்.
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1
புல்லிய காம்பினையுடைய பாதிரியின் வரிகள்பொருந்திய நிறமுடைய திரண்ட மலர்
உ. பாதிரிப்பூ பஞ்சுபோன்ற துய்யினை உச்சியில் கொண்டிருக்கும்.
அத்த பாதிரி துய் தலை புது வீ – அகம் 191/1
பாலையிலுள்ள துய்யினை உச்சியில் கொண்ட புதிய பாதிரிப்பூவை
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8,9
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரி
ஊ. இதன் புறவிதழ்கள் கருமையாக இருக்கும்.
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1
காட்டிலுள்ள பாதிரியின் கரிய புறவிதழையுடைய ஒளிபொருந்திய மலர்களை
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி/வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் - பெரும் 4,5 போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி/செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் - குறி 74,75 மா கொடி அதிரல் பூவொடு பாதிரி/தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் - நற் 52/1,2 துகிலிகை அன்ன துய் தலை பாதிரி/வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி - நற் 118/8,9 பராரை பாதிரி குறு மயிர் மா மலர் - நற் 337/4 வேனில் பாதிரி கூன் மலர் அன்ன - குறு 147/1 அம் சினை பாதிரி அலர்ந்து என - ஐங் 346/2 வேனில் பாதிரி விரி மலர் குவைஇ - ஐங் 361/2 குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி/நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரி 12/79,80 அதிரல் பரந்த அம் தண் பாதிரி/உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ - அகம் 99/6,7
அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191/1 புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ - அகம் 237/1 வேனில் பாதிரி கூனி மா மலர் - அகம் 257/1 கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261/1 பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் - புறம் 70/14 பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன - புறம் 399/7 நித்தில பந்துடன் ஈன்று பாதிரி ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால் - சிந்தா:1 52/1,2 ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே - சிந்தா:7 1650/4 மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் - மது:12/83 ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு - நாலடி:14 9/3 வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து - கார்40:3/1
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி - தேவா-சம்:2663/1 கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் - தேவா-சம்:3183/1,2 பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி - தேவா-சுந்:162/3 வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் - தேவா-சம்:3778/2 செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே - திருமந்:1003/4 பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் - நாலாயி:184/4 பனி பூம் குவளையொடு பாதிரி விரைஇ - உஞ்ஞை:40/123 பைம் கூன் பாதிரி போது பிரித்து அன்ன - உஞ்ஞை:42/204 நறும் பாதிரியும் நாள் மலர் கொகுடியும் - இலாவாண:12/20
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்