சொல் பொருள்
(வி.எ) 1. புரந்து, பாதுகாத்து, 2. ஒத்து,
சொல் பொருள் விளக்கம்
1. புரந்து, பாதுகாத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
protecting
being similar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4 வளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/27,28 உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும் கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள் வேய் அமை கண் இடை புரைஇ சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/23,24 மூங்கிலில் பொருந்திய கணுக்களின் நடுவிடத்தை ஒத்து சேய்மைக்கண் உள்ளனவாயினும் நாம் நடுங்கத்தக்க துயரினைத் தரும். மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10 கரிய இதழையுடைய அழகிய மலரைப் போன்ற கண்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்