சொல் பொருள்
(பெ) 1. வெளிப்பக்கம், 2. பின்பக்கம், 3. முதுகு, 4. ஒட்டியுள்ள பகுதி, 5. பக்கம், 6. இடம், 7. உடம்பு
சொல் பொருள் விளக்கம்
1. வெளிப்பக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
outside, backside, back, adjoining place, side, surface, place, body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172 யானையை (முன்னர்)க் கொன்ற பெரும் செயலையுடைய வீரரின், சுடர்விடும் வாளினால் ஏற்பட்ட விழுப்புண்ணைக் காண்பதற்காக (பாசறையைவிட்டு)வெளியில் வந்து, இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 46 ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்து வர புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5 முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலை சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை – ஐங் 282/1 மலைச் சாரலை அடுத்த பெரிய கதிர்களைக் கொண்ட சிறுதினையைக் காத்து மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178 மணிகளைப் பக்கங்களில் இட்ட பெரிய கால்களையுடைய பெண்யானைகளோடு, புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி – புறம் 257/8 பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப் பார்த்து நிறம் படு குருதி புறம் படின் அல்லது மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇ – பதி 79/16-18 மார்பினைக் கிழித்து வரும் குருதி உடம்பின் மேலே பட்டாலல்லது பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்