சொல் பொருள்
(வி) 1. கோபித்துக்கொள், சினந்துபேசு, 2. வெறு, 3. வருந்து
சொல் பொருள் விளக்கம்
1. கோபித்துக்கொள், சினந்துபேசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be indignant, dislike, de distressed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/3,4 உன் மனைவி யாரையுமே சினந்து பேசுவாள் – என்னை மட்டும் சும்மா விடுவாளா? மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல் வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் அன்னது ஆகலும் அறியாள் எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – ஐங் 87-90 புதுப்புதுப் பெண்டிரை நாடிச் செல்லும் தலைவனின் சிறந்த குணத்தை வண்டுகள் பற்றிக்கொண்டனவோ? புதுப்புது மலர்களைத் தேடிச் செல்லும் வண்டுகளின் சிறந்த குணத்தைத் தலைவன் பற்றிக்கொண்டானோ? அவன் குணம் அப்படிப்பட்டது என்பதனை அறியாள், என்னோடு கோபித்துக்கொள்ளும் அவனுடைய மகனின் தாய். துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப – அகம் 106/5,6 துறை பொருந்திய ஊரனின் மனைவி தன் கணவனை நம்மொடு கூட்டி வெறுத்துப்பேசுகின்றாள் என்பர் புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 203 (யானைகள் தினைப்புனத்தை அழுப்பதற்காக) வருந்தி, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்