சொல் பொருள்
(பெ) புலிப்பல் கோத்த சிறுவர் கழுத்தணி,
சொல் பொருள் விளக்கம்
புலிப்பல் கோத்த சிறுவர் கழுத்தணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Amulet tied on a child’s neck attaching two teeth of a tiger.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/9 சங்கஇலக்கியத்தில் சிறுவர்கள் தாலி அணிந்திருப்பதைப் பற்றிப் பல பாடல்கள் கூறுகின்றன. புலி பல் தாலி புதல்வன் புல்லி – குறு 161/3 பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி – அகம் 54/18 புலிப்பல் தாலி புன் தலைச் சிறாஅர் – புறம் 374/9 மிகவும் இள வயதில் போர்க்கோலம் பூண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடவந்த புலவர் இடைக்குன்றூர்க்கிழார் தாலி களைந்தன்றும் இலனே – புறம் 77/7 என்கிறார். புலிப்பல் தாலி அணிந்த இளம்பெண்கள் பற்றியும் குறிப்பு உள்ளது. உடன்போக்கு சென்ற தலைவியைச் சுரத்திடைத் தேடிச்சென்ற செவிலித்தாய் தன் ஆற்றாமையை வழியில் கண்ட மானிடம் புலம்புவதாக அமைந்த அகம்.7ஆவது பாடல் திருமணத்திற்கு முன்பு புலிப்பல்தாலி அணிந்திருந்த தலைவிபற்றிக் குறிப்பிடுகின்றது. பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணி தாலி ———————— ——————— கல் கெழு சிறுகுடி கானவன் மகளே – அகம் 7/17-22) இப்பாடல்களில் குறிக்கப்படும் புலிப்பல் தாலி ஆண்,பெண் என இருபால் சிறுவர் சிறுமியருக்கும் உரிய அணிகலன் என்பது தெளிவு. குறிஞ்சி, முல்லை சார்ந்த மாந்தர்களே புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்றும் அறியமுடிகின்றது. வீரத்தின் சின்னமாகப் புலிப்பல் தாலியை அணிந்து கொண்டனர் என்று தொ.பரமசிவன் (பண்பாட்டு அசைவுகள் 2001:52) குறிப்பிடுவது போன்று பொருள்கொள்ளாமல் சிறுவர்களும் சிறுமியரும் புலிப்பல்தாலி அணிந்திருந்தனர் என்ற குறிப்புகளையும் கவனத்தில்கொண்டால் அது ஒரு குலக்குறிச் சின்னமாக இருக்கலாம் எனக் கருதும் வாய்ப்புள்ளது. எனவே புலிப்பல் தாலி திருமணத்தோடு தொடர்புடையது அல்ல எனத் தெளியலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்