சொல் பொருள்
(பெ) புலையன் என்பதன் பெண்பால்,
சொல் பொருள் விளக்கம்
புலையன் என்பதன் பெண்பால்,
புலையன்,புலைத்தி என்பார் அன்றைய சமுதாயத்தில் கீழ்நிலையில் இருப்பவராகக் கருதப்பட்டவர்.
ஈமச்சடங்குகள் செய்பவர், சலவைத்தொழிலாளிகள் ஆகியோர் இவ்வாறு கருதப்பட்டனர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the feminine form of the masculine word ‘pulaiyan’.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4 வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன் மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் போழில் புனைந்த வரி புட்டில் – கலி 117/7,8 அழகிய புலைத்தி விலையாகக் கொடுத்த ஒரு பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல தாவுபு தெறிக்கும் ஆன் மேல் புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/5-7 தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளை ஒப்ப தாவித்துள்ளும் ஆனிரை மேல் மருங்கிலே விளங்கும் ஒள்ளிய வாளினையும் வீரக் கழலினையுமுடையோய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்