Skip to content

1. சொல் பொருள்

(பெ) சங்ககாலக் குறுநில மன்னன், கள்வர் கோமான் புல்லி

அணை, தழுவு, கட்டிப்பிடி

2. சொல் பொருள் விளக்கம்

இவன் கள்வர் கோமான் புல்லி என்று அழைக்கப்படுகிறான்.

இவனைப் பாடிய சங்ககாலப் புலவர்கள், கல்லாடனார்(அகம் 83,209), மாமூலனார்(அகம் 61, 295, 311, 393)
இவன் ”களவர் கோமான்” என்றும் “இளையர் பெருமகன்” என்றும் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.

இவன் மழபுலம் என்ற நாட்டை வென்றான். வேங்கட நாட்டை ஆண்டவன் புல்லி. புல்லி ஆண்ட நாட்டுக்கு மேற்கில் மழநாடு, புன்னாடு, கொண்கானம் என்னும் கொண்கான நாடு ஆகியவை இருந்தன. புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் குறிப்பிடுகிறார்( அகநானூறு, 295:11.15).

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain of sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் – அகம் 61/12,13

கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் – அகம் 83/9,10

மாஅல் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/8,9

கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து 10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, – அகநானூறு 295

கடல் உப்பை விற்க உமணர் கூட்டமாகச் செல்லும்போது, தளரும் வண்டிமாடுகளுக்கும், அவர்களுக்கும், புதிய வழிப்போக்கர்களுக்கும் உதவும் வகையில், முரம்பு மண்ணை இடித்துத் தோண்டிய கூவல் கிணற்றில் நீர் ஊறும் குன்றம், புல்லி என்னும் அரசன் ஆளுகைக்கு உட்பட்ட குன்றம் (வேங்கட மலை).

செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே. – அகநானூறு 311

பொய்யா நல் இசை மா வண் புல்லி/கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் – அகம் 359/12,13

நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி/தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/18

கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி/கழிவது ஆக கங்குல் என்று – நற் 314/6,7

புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/4

புலி பல் தாலி புதல்வன் புல்லி/அன்னா என்னும் அன்னையும் அன்னோ – குறு 161/3,4

புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/3

புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும் – கலி 75/25

போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41

புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/18

புல்லி புணர பெறின் – கலி 142/18

புல்லி பெரும செல் இனி அகத்து என – அகம் 66/15

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *