சொல் பொருள்
(பெ) 1. நில, நீர் தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதம், 2. பெரிய உருவமுடைய ஒன்று, 3. பஞ்சபூதங்களின் கடவுள்
சொல் பொருள் விளக்கம்
1. நில, நீர் தீ, காற்று, வானம் ஆகிய பஞ்சபூதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
five elements of nature, anything that is huge or monstrous, presiding deities of the five elements
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என புலவு களம் பொலிய வேட்டோய் – புறம் 372/10-12 திருமண விழாவில் நிகழ்த்துவது போல் விருந்தினக்கு எல்லாம் வெவ்விய வாய் வழியாகப் பெய்த பூதங்களின் பொருட்டான நீர் அமைவதாக என்று சொல்லி நீரைத் தெளித்து புலால் நாறும் போர்க்களம் விளங்க களவேள்வி செய்தவனே வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/66 வேதங்களுள் மந்திரச் சொல் நீ! பூதங்களுள் முதன்மையான வானமும் நீ! துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – பெரும் 235 துணங்கைக் கூத்தில் அழகிய பூதங்கள் (வெண்மையான)ஆடையை உடுத்தி நின்றவை போல பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் – பட் 57 பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்